மரண வீடுகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
மரண வீடுகளை நடத்துவோர் 24 மணித்தியாலத்திற்குள் அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவு செய்ய வேண்டும் என புதிய கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
24 மணித்தியாலத்திற்குள் அனைத்து இறுதி அஞ்சலி நடவடிக்கைகளும் நிறைவு செய்ய வேண்டும் என்பது உட்பட புதிய தீர்மானங்கள் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“மரண வீடுகளில் கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான தீர்மானத்தை நாங்கள் எடுத்துள்ளோம். அத்துடன் 24 மணித்தியாலங்களுக்குள் அஞ்சலி நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று திருமண நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளையும் நிறைவு செய்ய வேண்டும். இதுவரையில் 150 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் அதனை 50ஆக குறைக்க மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டரீதியான அறிவிப்பதற்கான அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர கேளிக்கை விடுதி தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது
அதற்கான தீர்மானங்கள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்” என ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
