டெங்கு நுளம்புகளை அழிப்பதற்கு புதிய பொறிமுறை - செய்திகளின் தொகுப்பு
நுளம்புகளை அழிப்பதற்கு புதிய பொறிமுறை ஒன்று இன்று(21.05.2023) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய அணுக முடியாத இடங்களில், நுளம்புகளை அழிப்பதற்காக ட்ரோன் கருவிகள் மற்றும் 'மொஸ்கிடோ டன்க்' என்ற இரசாயனம் என்பவற்றை பயன்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 35 ஆயிரத்து 283 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,



