2027ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2027ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கியப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, தரம் 5- க்கான புலமைப்பரிசில் பரீட்சை 2027 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 1 ஆம் திகதி நடைபெறும்.
மாணவர்களுக்கான அறிவுறுத்தல்
க.பொ.த உயர்தர பரீட்சை (A/L) 2027ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3 முதல் ஓகஸ்ட் 28 வரை நடைபெற உள்ளது. பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை 2027 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் திகதி நடத்தப்படும்.

இதற்கிடையில், க.பொ.த சாதாரண பரீட்சை (O/L) 2027 டிசம்பர் 7 முதல் டிசம்பர் 17 வரை நடைபெறும்.
பரீட்சை திகதிகளைத் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்தார்.
அறிவிக்கப்பட்ட திகதிகளை குறித்துக்கொண்டு, பரீட்சைகளுக்குத் தேவையான தயாரிப்புகளைச் செய்யுமாறு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலைகளுக்கும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் நுணுக்கமான முறையில் திருடப்பட்ட பை - சிசிடிவியில் சிக்கிய சில நிமிடங்களில் கைது
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள்! வெளிவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் புலனாய்வு தகவல்கள்
YOU MAY LIKE THIS VIDEO..