பாகிஸ்தானுக்குள் இருந்து இந்தியாவுக்கான ஆதரவு படை ஒன்றின் அறிவிப்பு
பாகிஸ்தான் - இந்திய யுத்தத்தின்போது, தாம் இந்திய இராணுவத்துக்கு ஆதரவாக செயற்படவுள்ளதாக பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற கிளர்ச்சிப் படை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் தென் மேற்கு பிராந்தியமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, நீண்ட காலமாக ஆயுதப்போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கோரிக்கையை முன்வைத்து, பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற கிளர்ச்சிப் படையினர், பாகிஸ்தானிய படையினர் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானிய கொடி
பலுசிஸ்தானின் பல பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். அத்துடன், அரசு அலுவலகங்களில் பாகிஸ்தானிய கொடியை அகற்றி விட்டு பலுசிஸ்தான் கொடியை ஏற்றியுள்ளனர்.
தங்களை தனி நாடாக அங்கீகரிக்கும்படி, இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கோரிக்கையையும் விடுத்துள்ளனர்.
இந்தநிலையில்,பாகிஸ்தானின் பயங்கரவாத அரசை ஒழிப்பதற்கான இறுதி முடிவை இந்தியா எடுக்க வேண்டும்.
இதற்காக, மேற்கு எல்லையில் இருந்து பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த தாம் தயாராக இருப்பதாக பலுசிஸ்தான் கிளர்ச்சிப் படை தெரிவித்துள்ளது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
