நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு இடப்பெயர்வுக்கான முக்கியக் காரணம்
இலங்கையின் சமீபத்திய 2024 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு அறிக்கை, நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு இடப்பெயர்வுக்கான முக்கியக் காரணத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த அறிக்கையின்படி, இலங்கையின் 3.1 மில்லியன் உள்நாட்டு மக்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் திருமணத்தை ஒரு காரணமாகக் கொண்டே இடப்பெயர்ந்துள்ளனர்.
[IXBS7HY
இடப்பெயர்வு
இவ்வாறு இடப்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்குச் சென்று குடியேறியுள்ளனர்.

திருமணத்தைத் தவிர்த்து, வேலைவாய்ப்பு (17%), குடும்பத் தேவைகள் (16%) மற்றும் நிரந்தர வதிவிடத்திற்குத் திரும்புதல் (11%) ஆகியவை பிற முக்கிய இடப்பெயர்வு காரணங்களாக உள்ளன.
மேலும், கல்வி, மீள்குடியேற்றம் மற்றும் பேரழிவு தொடர்பான இடப்பெயர்வுகளும் சிறிய அளவில் பங்களித்துள்ளன.
குறிப்பாக, பெரும்பாலான மாவட்டங்களில் திருமணம் என்பதே மக்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்திய முன்னணி காரணியாக இந்த சனத்தொகைக் கணக்கெடுப்பில் பதிவாகியுள்ளது.
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam