கண்டி எசல பெரஹரா தொடர்பில் வெளியான அறிவிப்பு
கண்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் ஆண்டுதோறும் நடைபெறும் எசல பெரஹராவின் முதல் சடங்கான கப பெரஹரா, ஆகஸ்ட் 13 ஆம் திகதி காலை 6:17 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(08.07.2026) பிற்பகல் தலதா மாளிகை வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே தியாவடான நிலமே பிரதீப் நிலங்கா டெல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பெரஹரா நிகழ்வுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆகஸ்ட் 13 ஆம் திகதி கப பெரஹரா நிறுவப்பட்ட பிறகு, நாதா, விஷ்ணு, பத்தினி மற்றும் கதிர்காமம் ஆகிய நான்கு முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 17 ஆம் திகதி வரை 5 நாட்களுக்கு அக பெரஹரா இடம்பெறும்.
அதன்பின்னர், முதல் கும்பள் பெரஹரா ஆகஸ்ட் 18 ஆம் திகதி வீதிகளில் வலம் வர ஆரம்பித்து, அங்கிருந்து பெரஹரா 22 ஆம் திகதி வரை தொடரும்.

முதல் ரந்தோலி பெரஹரா 23ஆம் திகதியும், இறுதி ரந்தோலி பெரஹரா 27ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
அதற்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 28ஆம் திகதி, தண்ணீர் வெட்டும் பெரஹரா மற்றும் பிற்பகல் பெரஹரா ஆகியவற்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதே நாளில் பெரஹரா வெற்றிகரமாக நடத்தப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க, நரம்பனவ ஸ்ரீ ஆனந்தா தேரர், மல்வத்த பீடத்தின் பிரதிப் பதிவாளர், மகாவெல ரத்தனபால தேரோ தேரர், நான்கு மகா தேவாலயங்களின் பஸ்நாயக்க நிலமேக்கள், மாவட்ட செயலாளர் இந்திக்க உடவத்த, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் மசிங்க உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.