இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு அமெரிக்க உறுதிபூண்டுள்ளதாக அறிவிப்பு
கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு ஒரு இலட்சம் பைசர் தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளது.
குறித்த தடுப்பூசிகளை ஏற்றி வந்த விமானம் இன்று பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
கொவெஸ் செயற்திட்டத்தின் ஊடாக 100 000 பைசர் தடுப்பூசிகள் அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
உயிர்களை பாதுகாத்து, பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு அமெரிக்க உறுதிபூண்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
ARRIVED TODAY: A donation of over 100,000 Pfizer vaccine doses from the U.S. to #SriLanka through #COVAX! These come at no cost to the Sri Lankan people because the U.S. is committed to saving lives & helping restart the Sri Lankan economy. #TogetherWeCan https://t.co/8YnTlEejph pic.twitter.com/2nPizMTutd
— Ambassador Teplitz (@USAmbSLM) August 28, 2021