லாஃப்ஸ் நிறுவனம் சற்றுமுன்னர் வெளியிட்ட அறிவிப்பு
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, 7,000 மெட்ரிக் டொன் கொள்ளளவு கொண்ட எல்பிஜி (LPG) எரிவாயு கப்பல் ஒன்று நாட்டிற்கு வந்துள்ளதாக லாக்ஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு இருப்பை ஏற்றி வந்த 'ஆண்டோவர்' என்ற கப்பல் வெற்றிகரமாக வந்து சேர்ந்துள்ளதாக லாக்ஃப்ஸ் எரிவாயு நிறுவனம் கூறியுள்ளது.
இலங்கை முழுவதும் உயர் வெப்பநிலை எச்சரிக்கை நிலை..! நாளை ஏற்படவுள்ள மாற்றம் - மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
சிலிண்டர்களை நிரப்புதல் மற்றும் விநியோகித்தல்
கப்பல் தற்போது ஹம்பாந்தோட்டையில் உள்ள லாக்ஃப்ஸ் முனையத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, எரிவாயு சிலிண்டர்களை நிரப்புதல் மற்றும் விநியோகித்தலை விரைவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் விரைவாக எரிவாயுவை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த எரிவாயு இருப்பு, உலகப்புகழ்பெற்ற மற்றும் நம்பகமான எரிசக்தி விநியோக நிறுவனமான நெதர்லாந்தின் 'SHV எனர்ஜி' நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது.
இலங்கையின் முக்கிய வங்கியில் பாரிய உள்மோசடி - வாடிக்கையாளர்களுக்கு மத்திய வங்கியின் அவசர அறிவுறுத்தல்