2007ஆம் ஆண்டிற்கு முன் பிறந்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு
2007.01.31ஆம் திகதிக்கு முன்னர் பிறந்துள்ள பிரஜைகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி குறித்த பிரஜைகள் தமது பெயர்கள், வாக்காளர் இடாப்பில் உள்ளதாவென கிராம அலுவலர்களிடம் உடனடியாக விசாரித்துக் கொள்ளுமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாக்காளர் பதிவு மற்றும் தேருநர் இடாப்பு மீளாய்வு வருடாந்தம் மேற்கொள்ளப்படும். தேர்தல்கள் ஆணையாளரால் ஒவ்வொரு மாவட்டத்திற்காகவும் பதிவு அலுவலர்களாக நியமனம் செய்யப்படுகின்ற மாவட்டச் செயலாளர் /அரசாங்க அதிபரின் மேற்பார்வையின் கீழ் மீளாய்வுப் பணிகள் மேற்கொள்ளல் மற்றும் நிருவகித்தல் மாவட்ட மட்டத்தில் தேர்தல்கள் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிரேஷ்ட பிரதி / பிரதி / உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களால் (உதவிப் பதிவு அலுவலர்கள்) மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு வீடுகளுக்காகவும் கணக்கெடுப்புப் படிவங்களை (பிசீ படிவம்) பிழையின்றி பூரணப்படுத்துவது வீட்டுத் தலைவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. கிராம மட்டத்தில் அரச அலுவலரான கிராம அலுவலரினால் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதோடு, கணக்கெடுப்புப் பணிகள் சிக்கலான நகர் பிரதேசங்களில் (உ-ம் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு மாநகர அதிகார எல்லைகள்) இப்பணிகள் விஷேட கணக்கெடுப்பு அலுவலர்களுக்குக் கையளிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |