முல்லைத்தீவு வட்டுவாகல் வீதியில் பயணிப்போருக்கான அறிவித்தல்!
முல்லைத்தீவு மாவட்ட நகருக்குள் நுழையும் பிரதான வீதியான முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வீதியில் பயணிப்போர் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முதன்மை பாலம்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வீதியில் முதன்மை பாலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
பாலத்தில் அவ்வப்போது ஏற்படும் வெடிப்பு மற்றும் பாதிப்புக்கள் சீர்செய்யப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது பாலத்தில் ஒரு பகுதியில் வீதி தாழிறங்கிய நிலையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பாலம் புனரமைப்பு
இந்நிலையில் குறித்த வீதியால் பயணிப்பவர்கள் மிகுந்த அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக குறித்த பாலம் புனரமைக்கப்படாத நிலையில் இந்த பாலத்தினை புனரமைக்குமாறு தொடர்சியாக
கடற்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை
விடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.








அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
