நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி
பொருளாதாரம் சீர்குலைந்து வருவதாகவும் நாட்டில் குழப்பத்தை அதிகரிக்கும் மற்றொரு 'அரகலயா'வை நாட வேண்டாம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.
ஐ.டி.சி ரத்னதிப ஹோட்டல் திறப்பு விழாவின் போது உரையாற்றுகையிலே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம்
இதேவேளை முன்னேற்றத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி மக்களை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், மக்கள் மீண்டும் போராடாத பொருளாதார சூழலை நாட்டில் உருவாக்குவதற்கான தனது அர்ப்பணிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் வெற்றிகரமாக மீளக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
சீர்குலைக்கும் நடவடிக்கை
இந்நிலையில் மீள் பொருளாதாரத்தை நிறுவுவதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான தனது முயற்சிகளை வலியுறுத்தினார்.
மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டில் நிலவிய நிலைமையை நீங்கள் நினைவுகூர்வீர்கள் என நான் நம்புகிறேன். எனினும் இரண்டு வருடங்களுக்குள் நாம் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பினோம்.
மீண்டும் அதை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என ஜனாதிபதி விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
