திருகோணமலை மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை பைசர் தடுப்பூசி பெற்றுக் கொள்ள தவறிய 20 வயதிற்கு மேற்பட்டோருக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இத் தகவலை அறிவித்துள்ளது.
எதிர்வரும் 10ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 13 ஆம் திகதி வியாழக்கிழமை வரையுள்ள காலப்பகுதியில் திருகோணமலை மட்களி அசெம்பிளி கோல்ட்ஒப் ஜெர்ச், திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள குளக்கோட்டன் மண்டபம் மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலை என்பவற்றில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உள்ள காலப்பகுதியில் நடைபெற உள்ளதால் உரியவர்கள் இச்சேவையை தவறாது பெற்றுக் கொள்ளுமாறு திருகோணமலை சுகாதர வைத்திய அதிகாரி அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது
தடுப்பூசி வழங்கும் சேவையைப் 60 வயதிற்கு மேற்பட்டோரின் ஏதாவது இரண்டு தடுப்பூசியை பெற்று ஆறு மாதங்கள் நிறைவுற்று இருப்பதுடன் 20 வயதிற்கு மேற்பட்டோரில் ஏதாவது இரண்டு தடுப்பூசிகளை பெற்று மூன்று மாதங்கள் நிறைவுற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறு வழங்கப்படும் தடுப்பூசியினை தவறாது உரிய நேரத்தில்
பெற்றுக்கொள்ளுமாறும் தடுப்பூசியினை பெற வருகைதரும் நபர்கள் தவறாமல்
தங்களுக்குரிய தடுப்பூசி அட்டையுடன் சமூகமளிக்குமாறும் திருகோணமலை சுகாதர
வைத்திய அதிகாரி அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
