கனடா செல்லும் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்பட மாட்டாது என குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை அலுவலக பிரதானி தெரிவித்துள்ளார்.
அண்மையில் கனடாவில் கைக்குழந்தை உள்ளிட்ட ஆறு பேர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த சம்பவத்தில் சந்தேகநபராக இலங்கையை சேர்ந்த இளைஞரொருவரே அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வழமை போல் பரிசீலனை
இந்த நிலையில் இலங்கையர்கள் அதிகளவில் புலம்பெயரும் நாடுகளில் ஒன்றான கனடா இந்த கொலை சம்பவம் காரணமாக கனடா செல்லும் இலங்கையர்களுக்கு ஏதேனும் தடை ஏற்படுத்தப்படுமா என ஊடகமொன்று வினவிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கனடாவில் ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்பட மாட்டாது.
கிடைக்கப்பெறும் அனைத்து விண்ணப்பங்களையும் வழமைபோல் பரிசீலிப்பது எமது கொள்கையாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
