எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான திகதி அறிவிப்பு
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை கையளிக்கும் கால அவகாசம் நேற்று (12) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில், வேட்புமனு நிராகரிப்புக்கான கால அவகாசம் பிற்பகல் 1.30 மணி வரை வழங்கப்பட்டிருந்தது.
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள்
அதன்படி, மொத்தம் 09 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 02 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை கையளித்திருந்தன.
இந்நிலையில் ஜனசேத பெரமுன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன ஐக்கிய முன்னணி, பொதுஜன ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பு, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் கட்சி, இரண்டாம் தலைமுறை கட்சி போன்றனவாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |