ரணிலுக்கு கிடைக்கப் போகும் மொத்த வாக்குகள்! நாடாளுமன்றத்தை கலைக்கத் தயாராகும் ஜனாதிபதி வேட்பாளர்
தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 50 வீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டதாக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாண மக்களும் ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்த தயாராகி விட்டதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றம் கலைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து கெஸ்பேவ நகரில் நேற்று(12) நடைபெற்ற, "இயலும் ஸ்ரீலங்கா" மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டத்தில், பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் பந்துல குணவர்தன உட்பட அரசியல் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, கருத்து தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த,
தாம் ஆட்சிக்கு வந்தால் முதலாவதாக நாடாளுமன்றத்தைக் கலைக்கப்போவதாக அநுரகுமார திசாநாயக்க தெரிவித்து வருகின்றார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம் அதுவல்ல.
வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். சம்பள அதிகரிப்புகளை வழங்க வேண்டும். மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும். இது போன்று பல்வேறு வேலைத் திட்டங்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |