தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
அடுத்த வாரம் உள்ளுராட்சி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளை சந்தித்து தேர்தலுக்கான மேலதிக ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை வாக்குச் சாவடி விபரங்கள் கிடைத்தவுடன் வாக்கு பெட்டிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவை சரி செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கணக்கெடுப்பு
கடந்த தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட பல சேதமடைந்த வாக்குப்பெட்டிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை பழுதுபார்ப்பதற்காக அரசாங்க கேந்திர நிலையத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலுக்கு ஆயத்தமாக அதிகாரிகள் கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் எனவும் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரையிலான காலக்கட்டத்தில் தேர்தல் நடைபெறும் என்று ஆணையம் முன்னதாக அறிவித்தது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 9 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
