வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் 135வது ஆண்டு நடைபவனி
வவுனியாவின் முன்னணி தேசிய பாடசாலையான இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் 135வது ஆண்டினை கொண்டாடும் முகமாக இன்று (09.08) நடைபவனி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியாவில் கல்வி மற்றும் இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி 135வது ஆண்டினை கொண்டாடி வருகின்றது.
நடைபவனியில் கலந்து கொண்டவர்கள்
இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் இக்கல்லூரியின் இந்நிகழ்வுக்கு வலுச் சேர்க்கும் முகமாக கல்லூரியின் மாணவிகள், பழைய மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மேள தாள வாத்தியங்கள் மற்றும் இசை மழையுடன் நடைபவனி ஒன்றை மேற்கொண்டனர்.
பாடசாலை முன்பாக ஆரம்பித்த நடைபவனியானது இரண்டாம் குறுக்குத் தெரு ஊடாக கண்டி வீதியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து பசார் வீதி ஊடாகச் சென்று ஹொரவப்பொத்தானை வீதி ஊடாக பாடசாலை முன்றலை சென்றடைந்தது.












மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
