சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வு
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சமுர்த்திப் பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி கௌரவிப்பும் சமுர்த்தி முகாமையாளர் றியாத ஏ மஜீத் எழுதிய இலங்கையில் வறுமை ஒழிப்பு, சமுர்த்தித் திட்டத்தின் வகிபாகம் புத்தக வெளியீட்டு நிகழ்வும்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தலைமையில் தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்போர் அரங்கில் இடம்பெற்றது.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீ.டி, களுவராச்சி மற்றும் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் எஸ்.ஜெகராஜன், தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம்.பாஸில் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் எம்.ஜி.எஸ்.எஸ்.கித்சிறி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நூல் வெளியீடு
சமுர்த்தி திட்டத்தின் பயன்கள், பிரதேச அளவில் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் வறுமை ஒழிப்பில் அதன் பங்களிப்பு குறித்து சமுர்த்தி முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் எழுதிய நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நிகழ்வில் புகைத்தல் எதிர்ப்பு தின கொடி விற்பனையில் அதிகூடிய நிதிகளைச் சேகரித்த மாவட்டத்தில் முதலிடம் பெற்றுத்தந்த முதல் 10 கிராமமட்ட சீ.வி.ஓக்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கௌரவித்தல் நிகழ்வு இடம்பெற்றதுடன் அதில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம்களை பெற்றவர்களுக்கு பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் சிப்தொற புலமைப்பரிசில் பெற்று 2024 ஆம் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான 15 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

















ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

முத்தக் காட்சிகளில் இனி நடிக்க மாட்டேன்.. நிச்சயத்துக்கு பின் விஷால் எடுத்த அதிர்ச்சி முடிவு Cineulagam

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri
