அடுத்த கப்பலில் விசமருந்தை ஏற்றி அனுப்புங்கள் குடித்து சாகின்றோம்: இந்திய அரசிடம் அன்னராசா வேண்டுகோள்

Indian fishermen Jaffna Sri Lanka Economic Crisis India Sri Lanka Fisherman
By Kajinthan Jul 01, 2022 08:09 AM GMT
Report

தமிழக கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய அத்துமீறலை இந்திய அரசும் தமிழக அரசும் கட்டுப்படுத்தாவிட்டால் வெளிநாட்டு தூதரகங்களிடம் வடக்கு கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை கோர வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவோம் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் நேற்று(30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துமீறல்கள்

அடுத்த கப்பலில் விசமருந்தை ஏற்றி அனுப்புங்கள் குடித்து சாகின்றோம்: இந்திய அரசிடம் அன்னராசா வேண்டுகோள் | Annarasa Appeals Government India

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய இழுவமடித் தொழிலாள் வடக்கு மாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழ்நாட்டு அரசையும் இந்திய மத்திய அரசையும் எல்லை தாண்டி வடக்குக் கடற்பரப்புக்குள் வருகை தரும் தமிழக கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துமாறு பல போராட்டங்களை நடத்தியது மட்டுமல்லாது எழுத்து மூலமாக பல கடிதங்களையும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு வழங்கியுள்ளோம்.

வடக்கு கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்துக்காக கடற்தொழிலை செய்து வருகின்ற நிலையில் தற்போதைய பொருளாதாரம் நெருக்கடியிலும் தமிழக அத்துமீறிய படகுகளால் அவர்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த கப்பலில் விசமருந்தை ஏற்றி அனுப்புங்கள் குடித்து சாகின்றோம்: இந்திய அரசிடம் அன்னராசா வேண்டுகோள் | Annarasa Appeals Government India

இராமேஸ்வரத்தில் தமிழக ஆளும் தரப்பை சேர்ந்தவர்களில் சிலர் கடற்றொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஒன்றிணைத்து கச்சதீவை மீட்போம் என அறிக்கை விட்டுள்ளனர். கச்சதீவு எமது சொத்து எக்காரனம் கொண்டும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுப்பதற்கு நாம் தயாரில்லாததோடு 8 கோடி தமிழ் மக்களையும் நாம் குறை கூறத் தயார் இல்லை.

தமிழக மக்கள் எமது தொப்புள் கொடி உறவு என கூறிக்கொள்வதில் பெருமை அடையும் அதேவேளை எமக்கு எதிராக திரைமறைவில் திட்டங்கள் தீட்டினால் எதிராக போராடுவதற்கும் தயங்க போவதில்லை.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில் இந்தியா உதவுவதை நாம் வரவேற்கும் அதேசமயம் உதவி கொடுத்து எம்மை உபத்திரத்துக்கு ஆளாக்கக் கூடாது.

அடுத்த கப்பலில் விசமருந்தை ஏற்றி அனுப்புங்கள் குடித்து சாகின்றோம்: இந்திய அரசிடம் அன்னராசா வேண்டுகோள் | Annarasa Appeals Government India

இவ்வாரம் பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்புக்குள் தமிழ்நாடு சட்ட விரோத இழுவைப்படகுகள் உள்நுழைந்து சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை நாசப்படுத்தியுள்ளன.

முல்லைத்தீவில் நேற்று முன்தினம்(29) புதன்கிழமை மாலை 3 மணியளவில் இந்தியா இழுவைப் படகுகள் வீட்டின் முற்றத்துக்கு வந்தது போல் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருப்பதை முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கடலில் சென்று நேரில் படம்பிடித்து உள்ளார்.

கடற்றொழிலாளர்களின் பிரச்சினை ஒரு சில தமிழ் அரசியல்வாதிகளின் பிரச்சினை அல்ல ஒட்டுமொத்த தமிழ் அரசியல்வாதிகளும் எமது பிரச்சினை தொடர்பில் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும்.

வேண்டுகோள்

அடுத்த கப்பலில் விசமருந்தை ஏற்றி அனுப்புங்கள் குடித்து சாகின்றோம்: இந்திய அரசிடம் அன்னராசா வேண்டுகோள் | Annarasa Appeals Government India

இந்திய அரசிடம் நாம் ஒன்றைக் கேட்க விரும்புகிறோம் உதவிப் பொருட்களை வழங்கிவிட்டு எம்மை அழிப்பதிலும் பார்க்க வடக்கு மாகாணத்திற்கு அடுத்த கப்பலில் விசமருந்தை ஏற்றி அனுப்புங்கள் குடித்து சாகின்றோம் தமிழக கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாக எமது கடற்பரப்பில் தொழில் செய்யட்டும்.

ஏனெனில் இதை தவிர வேறு வழி எமக்கு தெரியவில்லை நாம் பொருளாதார பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் நிலையில் எம்மை மென்மேலும் வருந்தாமல் அழிப்பதற்கு இதுவே சரியான வழி.

ஆகவே இந்திய அரசிடமும் தமிழ்நாட்டு அரசிடமும் நாம் பணிவாக ஒரு கோரிக்கையை கொடுக்கிறோம் தமிழ்நாடு எல்லை தாண்டிய இழுவைப் படகுகளை தாங்கள் நிறுத்தாவிட்டால் வெளிநாட்டு தூதரகங்களிடம் எமது கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்து தருமாறு கோரிக்கை முன்வைத்தலை தவிர வேறு வழி தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.     

10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US