பாஜகவிலிருந்து விலகுகின்றார் அண்ணாமலை! தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு

Tamil nadu BJP K. Annamalai
By Shadhu Shanker Jun 03, 2026 07:32 AM GMT
Report

பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகும் முடிவினை எடுத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது சம்பந்தமாக அவர் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ள நிலையில், அதனை பாஜக தலைமை வாங்க மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்திய பௌத்த தேரர்..! வெளிச்சத்திற்கு வந்த தகவல்

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்திய பௌத்த தேரர்..! வெளிச்சத்திற்கு வந்த தகவல்

அண்ணாமலையின் முடிவு

ஆனாலும் அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, சமீப காலமாகவே கட்சியில் இருந்து ஒரம்கட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

பாஜகவிலிருந்து விலகுகின்றார் அண்ணாமலை! தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு | Annamalai Quits Bjp Start New Political Movement

அத்தோடு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலைக்கு ஆசனம் வழங்கப்படாததும், அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தேர்தல் முடிவுக்கு பின்பாக அண்ணாமலை புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் நேற்றைய தினம் டெல்லிக்கு சென்ற அண்ணாமலை தனது பதவி விலகல் கடிதத்தை பாஜகவிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நிதின் நபின், அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.

அதே நேரம் அவரிடம் பதவி விலகல் கடிதத்தை பாஜக தலைமை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அண்ணாமலையை சமாதானம் செய்யும் முயற்சியிலும் பாஜக ஈடுபட்டுள்ளது. அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்! சற்று முன்னர் கோட்டாபயவுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்! சற்று முன்னர் கோட்டாபயவுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை

பாஜகவிலிருந்து விலகல்

பாஜகவில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதே போல் ஆர்எஸ்எஸ் தலைவர்களும் இது சம்பந்தமாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் தன்னுடைய முடிவில் அண்ணாமலை உறுதியாக இருந்த காரணத்தால், இந்த பேச்சுவார்த்தை என்பது தோல்வியை தழுவியுள்ளது. பாஜகவில் தொடர்ந்து பயணிக்க முடியாது.

பாஜகவிலிருந்து விலகுகின்றார் அண்ணாமலை! தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு | Annamalai Quits Bjp Start New Political Movement

விலக போகிறேன் என்று உறுதியாக தன்னுடைய பதிலை கூறியுள்ளார் அண்ணாமலை. அதோடு பாஜகவில் இருந்து விலகுவதற்கான காரணம் குறித்தும் விரிவாக அவர் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல் மீண்டும் மாநில தலைவர் பொறுப்பு கொடுத்தாலும், தமிழக பாஜகவில் உள்ள பிற தலைவர்களின் ஒத்துழைப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. எனவே என்னை தனியாக செயல்பட விடுங்கள் என தன்னுடைய முடிவை அண்ணாமலை உறுதியாக தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நாளை தனது பிறந்த நாளில் பாஜகவில் இருந்து விலகியது தொடர்பாக அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் அண்ணாமலை வழங்கியுள்ள பதவி விலகல் கடிதத்தில் தமிழ்நாடு பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

அதோடு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அடைந்த தோல்விக்கான காரணங்களையும் விரிவாக தனது பதவி விலகல் கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழக பாஜகவினர் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் அதிகரிக்கப்படவுள்ள மற்றுமொரு கட்டணம்! வெளியான அறிவிப்பு

இலங்கையில் அதிகரிக்கப்படவுள்ள மற்றுமொரு கட்டணம்! வெளியான அறிவிப்பு

தனிக்கட்சி ஆரம்பம்

அத்தோடு பாஜக தலைமையிடம் தான் கட்சியில் இணைந்த சமயத்தில் தன்னை நம்பி பல இளம் வயதுள்ளவர்கள் எனக்கு பின்னால் அணி வகுத்தனர்.

அவர்களுக்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் அண்ணாமலை முன்வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜகவிலிருந்து விலகுகின்றார் அண்ணாமலை! தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு | Annamalai Quits Bjp Start New Political Movement

மேலும் தனிக்கட்சி ஆரம்பித்தாலும், பாஜகவுடன் இணக்கமாகவே செயல்படுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளாராம்.

இதனால் பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனிடையில் அவர் கட்சியில் இருந்து விலகியுள்ளதை பட்டாசு வெடித்து அவரது ஆதரவாளர்கள் ஆங்காங்கே கொண்டாடி வருகின்றனர்.

அத்தோடு அண்ணாமலைக்கு ஆதரவாக பல இடங்களிலில் பரபரப்பு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். தலைமை ஏற்க வா, தமிழ்நாடு பொலிடிகல் சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் குறிப்பிட்டு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US