அன்னை பூபதியின் ஊர்தி பவனி: திருகோணமலையை வந்தடைவு (Video)
யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஆரம்பமான ஊர்திப் பவனி திருகோணமலையை வந்தடைந்துள்ளது.
திருகோணமலையில் குறித்த ஊர்தி பவனியை திருகோணமலை தமிழர் பேரவையின் முக்கிய செயற்பாட்டாளர்கள் தபால் கந்தோர் சந்தியில் வரவேற்று அஞ்சலி செலுத்தினர்.
அன்னை பூபதியின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஆரம்பமான ஊர்திப் பவனி இன்று (17) மாலை 6.00 மணியளவில் திருகோணமலையை வந்தடைந்ததுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
செய்தி: பதுர்தீன் சியானா
முதலாம் இணைப்பு
அன்னை பூபதியின் 35ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஆரம்பமான ஊர்திப்பவனி முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை நோக்கிப் பயணித்துள்ளது.
இந்த ஊர்தி பயணம் இன்றைய தினம் (17.04.2023) நண்பகல் ஆரம்பமாகியுள்ளது.
முல்லைத்தீவிற்கு வந்த அன்னை பூபதியின் ஊர்தி பவனி இறுதிப் போரில் உயிரிழந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குச் சென்று அங்குப் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாகச் சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால்
இதனைத் தொடர்ந்து வட்டுவாகல் பாலம் ஊடாக முல்லைத்தீவு நகரைச் சென்றடைந்து கொக்குளாய் வீதி ஊடாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தினை சென்றடையவுள்ளது.
இந்த ஊர்தி பயணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் தொண்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பயணத்தினை மேற்கொண்டுள்ளார்கள்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் குரல்பதிவை முள்ளிவாய்க்கால்
நினைவு முற்றத்தில் வைத்து வழங்கியுள்ளார்.













இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri

தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
