ட்ரம்பை நெருங்கும் ஆபத்து.. ஆட்சியை கவிழ்க்கும் சின்னத்தால் பரபரப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு தற்போது புதிய ஆபத்து ஒன்று நெருங்கி வருவதாக அரசியல் நிபுணர்களால் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகம் மொத்தம் பரவலாக அறியப்பட்ட ஒரு சின்னமே தற்போது அரசியல் நிபுணர்களால் ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஒரு தொப்பியுடன் சிரிக்கும் மண்டை ஓடு உள்ள சின்னமானது, ஒரு காலத்தில் ஜப்பானிய காமிக்கான One Pieceல் ஒரு கடற்கொள்ளையர் குழு மகிழ்ச்சியின் அடையாளமாக பயன்படுத்தப்பட்டது.
கிளர்ச்சியின் அடையாளம்
ஆனால் தற்போது குறித்த உருவம் உலகம் முழுவதும் கிளர்ச்சியின் அடையாளமாக மாறியுள்ளது. அது அமெரிக்காவில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் தற்போது காணப்படுகிறது.
இந்த ஒரு மண்டை ஓடு கொடியானது, முதல் முதலில் ஒக்டோபர் 2023இல் இந்தோனேசியாவில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் காணப்பட்டது.
அடுத்த சில மாதங்களில் இந்த One Piece மண்டை ஓடு கொடியானது நேபாளத்திலிருந்து மடகாஸ்கர் வரையிலான போராட்டங்களில் தோன்றத் தொடங்கியது. இந்த போராட்டங்கள் அனைத்தும் அங்குள்ள முழு அரசாங்கத்தையும் வீழ்த்தியும் உள்ளது.
இந்த மண்டை ஓடு கொடி அமெரிக்காவில் புலம்பெயர் மக்களுக்கு எதிரான ட்ரம்பின் ஒடுக்குமுறைக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களில், அமெரிக்க நகரங்களில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் மட்டுமின்றி, அப்பிள் கடைகளுக்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டத்திலும் காணப்பட்டுள்ளது.
இந்த மண்டை ஓட்டு கொடிக்கு இணையத்தில் Gen Z மக்களால் பெரும் ஆதரவு திரண்டு வருகிறது. Gen Z மக்களுக்கு கிளர்ச்சி மற்றும் சுதந்திரத்தின் உலகளாவிய அடையாளமாக இந்த மண்டை ஓடு கொடி மாறி வருகிறது, ஏற்கனவே 10 நாடுகளில் Gen Z மக்களால் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானிய காமிக்கான One Pieceல் இந்த மண்டை ஓடு கொடியானது கேலி, மற்றும் கிண்டலுக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள Gen Z இளைஞர்களுக்கு, இது எதிர்ப்பு, ஒடுக்குமுறையை எதிர்ப்பது, அதிகாரத்திலிருந்து விடுதலை உள்ளிட்டவைகளுக்கான அடையாளமாக மாறியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



