மோடியின் வருகைக்கு முன்னர் விலங்கு உரிமை ஆர்வலர்கள் நடத்தியுள்ள போராட்டம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு ஒரு நாள் முன்னதாக, இலங்கை விலங்கு உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.
நாளை மோடியின் வருகைக்கு முன்னதாக, கொழும்பிலும், பௌத்த மத யாத்திரை நகரமான அனுராதபுரத்திலும் உள்ள அதிகாரிகள், தெரு நாய்களை பிடித்து அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
விலங்கு உரிமைகள்
கொழும்பின் பல தெருநாய்களுக்கு முறையான உரிமையாளர்கள் இல்லை. அத்துடன் அவை தெரு நாய்கள் என்பதை காட்டிலும் சமூக நாய்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்தநிலையில், விலங்கு உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான பேரணி அமைப்பைச் சேர்ந்த எதிர்ப்பாளர்கள் இன்று, இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் ஒரு மனுவை சமர்ப்பித்த பின்னர் கொழும்பில் உள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் எங்கள் சமூக நாய்களை கொடூரமாக அகற்றுவதை நிறுத்துங்கள் என்று ஒரு பதாகைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.
தெரு நாய்கள்
பொது பூங்காக்களில் உள்ள பல நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு கருத்தடை செய்யப்பட்டதாகவும், உள்ளூர்வாசிகள் மற்றும் விலங்கு நலக் குழுக்களால் அவை பராமரிக்கப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை விலங்கு கொடுமைக்கு பெயர் பெற்ற நாடாக இலங்கை இருக்கும்போது சுற்றுலாவை எவ்வாறு ஊக்குவிக்க முடியும் என்று போராட்டக்காரர்களால் மற்றொரு பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதற்கிடையில் இந்த தெரு நாய்கள் கொடூரமாக அகற்றுவதைத் தடுக்க புதுடில்லி தலையிட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
