சிறைச்சாலையினுள் கொடூரமான முறையில் கொலை செய்ய முயற்சி! பரபரப்பான சம்பவம்..
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் போதை குற்றச்சாட்டில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஒருவரை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட முயற்சியிலிருந்து அவர் தப்பியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருக்கும் சஸ்மின் நுராஜ் என்பவரை சிறையினுள் ஒரு குழு குறித்த நபரை சுற்றிவளைத்து பிடித்து கழுத்தை அறுத்து கொள்ள முயற்சித்த போது,பெரும் போராட்டத்தின் மத்தியில் சஸ்மின் நுராஜ் தப்பியுள்ளார்.

ஆனாலும் அவரின் வலது கையிலும் வாய் பகுதியில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்களின் பொற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
பொற்றோரின் கருத்து
இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில் பகலே பொற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இவர் தற்போது தங்காலை ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக பற்றோர்கள் தெரிவித்த கருத்து, மகன் போதை பொருள் மோசடியில் தொடர்புபட்டார் என்று தெரியாது,.ஆனால் பாரிய போதை மாபியா கும்பலின் தலைவரான தெய்பாலே குழுவினர்,எப்படியாவது சிறைக்கு அனுப்பி மகனை போட்டு தள்ளவே முயற்சித்தனர் என்கின்றனர்.
ஆனாலும் சிறைச்சாலையில் கொலை முயற்சி மேற் கொள்வது,பாதுகாப்பு தொடர்பில் பாரிய சிக்கல் இருக்கிறது.எமக்கு கிடைத்த சிறைச்சாலை புலனாய்வு தகவல்களின் படி தெய்பாலே,சஸ்மின் நுராஜ் என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தெரியவருகிறது என குறிப்பிட்டுள்ளனர்.
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam