என்ஜியோகிராம் கருவி இல்லாததால் உயிரிழக்கும் அபாயத்தில் பெருந்தோட்ட மக்கள்!

Sri Lanka Upcountry People Sri Lanka Colombo Hospital Hospitals in Sri Lanka
By Renuka Apr 23, 2023 10:01 AM GMT
Report

இதயத்துக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை இருக்கிறதா என்பதை அறிந்து, இரத்த நாளங்களை எக்ஸ்ரே படங்களின் மூலம் கண்டறிவதற்கு என்ஜியோகிராம் (Angiogram) கருவியைக் கொண்டு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. 

இந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்படுகின்றது.

ஆனால், பெருந்தோட்ட மற்றும் கிராமப்புற மக்கள் பரந்து வாழும் ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளில் இந்த கருவிகள் இல்லை.

என்ஜியோகிராம் கருவி இல்லாததால் உயிரிழக்கும் அபாயத்தில் பெருந்தோட்ட மக்கள்! | Angiogram Instrument Test

பரிசோதனைக்காக நோயாளர்கள்

இலங்கையில் 42 அரச வைத்தியசாலைகளில் மாத்திரமே இக்கருவிகள் இருக்கின்றன.

இக்கருவியினூடாக செய்யப்படும் பரிசோதனைக்காக நோயாளர்கள் கண்டி அல்லது கொழும்புக்குச் செல்கின்றனர். அவர்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்வாங்கப்பட்டு திகதிகள் வழங்கப்படுகின்றன.

ஆனால், அந்த காலம் வருவதற்கு முன்பாகவே அந்த நோயாளர்களில் பலர் உயிரிழந்து விடுகின்றனர்.

கடந்த வாரம் பதுளை வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக வருகை தந்து, திகதி வழங்கப்பட்ட 36 வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

இந்த பரிசோதனைகளைத் தனியார் மருத்துவமனைகளில் செய்வதாயின், ஒரு இலட்சத்துக்கும் அதிகமாகச் செலவிட வேண்டியிருக்கிறது.

என்ஜியோகிராம் கருவி இல்லாததால் உயிரிழக்கும் அபாயத்தில் பெருந்தோட்ட மக்கள்! | Angiogram Instrument Test

அரசாங்கத்திடம் நிதி இல்லை

சப்ரகமுவ மாகாணத்தில் உள்ளவர்கள் அருகில் உள்ள கண்டி மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளுக்குச் செல்லலாம்.

ஆனால், ஊவா மாகாணம் அப்படியல்ல. நோயைச் சுமந்துகொண்டு நோயாளர்களால் அவ்வளவு தூரம் பயணிக்க முடியாது.

சுமார் 14 இலட்சம் சனத்தொகை கொண்ட இந்த மாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் ஏதாவதொரு வைத்தியசாலைக்கு இக்கருவி மிக மிக அவசரத் தேவையாக உள்ளது.

நாம் பல தடவை சுகாதார அமைச்சின் ஊடாக அரசாங்கத்துக்கு இது குறித்து அறிவித்துவிட்டோம்.

என்ஜியோகிராம் கருவியின் விலை சுமார் 25 கோடியாகும். அக்கருவியைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லாவிடினும், எமக்கு அனுமதி அளித்தால், நாம் தனவந்தர்களிடமும் ஏனையோரிடமும் நிதி திரட்டி, இக்கருவியைக் கொள்வனவு செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம்.

என்ஜியோகிராம் கருவி இல்லாததால் உயிரிழக்கும் அபாயத்தில் பெருந்தோட்ட மக்கள்! | Angiogram Instrument Test

கண்முன்னையே மரணம்

பதுளை பொது வைத்தியசாலைக்கு நாளொன்றுக்கு சுமார் 20 பேர் வரை இதய நோய் சம்பந்தமான சிகிச்சைகளுக்காக வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஏழைகள்.

எமது கண்முன்னே நாங்கள் சிகிச்சை வழங்கும் நோயாளர்கள், நோய்களைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாமல் எமது கண்முன்னையே மரணிப்பதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது.

இந்த கருவிகள் இருந்தால் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களை எம்மால் காப்பாற்ற முடியும். ஆகவே, அரசாங்கமும் உரியத் தரப்பினரும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் அபிவிருத்திகளைப் பற்றிப் பேசுகிறது. ஆனால், அதைக் காண மக்கள் முதலில் உயிருடன் இருக்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன் என்றார். 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US