ஜேர்மனியில் ஓய்வு பெறும் இரும்பு சீமாட்டிக்கு இத்தனை வரப்பிரசாதங்களா?
ஜேர்மனியில் 16 ஆண்டுகள் சேன்ஸலராக பதவி வகித்த இரும்பு சீமாட்டி ஏஞ்சலா மெர்க்கல் (Angela Merkel) ஓய்வு பெறவுள்ள நிலையில் அவருக்கு கிடைக்கவுள்ள வரப்பிரசாதங்கள் தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது.
ஏஞ்சலா ஓய்வு பெறப் போவது உண்மைதான் என்றாலும், புதிய அரசு அமையும் வரையில் அவர்தான் நாட்டை கவனித்துக் கொள்ளப் போகிறார் என செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதற்கிடையில், ஓய்வு பெற்ற பின் அவருக்கு மாதம் 15,000 யூரோக்கள் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஓய்வு பெற்றாலும், அவருக்கு நாடாளுமன்ற வளாகத்திலேயே ஒரு அலுவலகம் ஒதுக்கப்பட உள்ளதாக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
அவருக்கு பாதுகாவலர்கள் மற்றும் ஒரு அரசு வாகனம் வழங்கப்படுவதுடன், அதற்கொரு சாரதி, இரண்டு ஆலோசகர்கள் அத்துடன் ஒரு செயலாளர் ஆகியோர் நியமிக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்தி...
16 வருடங்கள் ஜேர்மனியை ஆட்சி செய்த பலம் பொருந்திய பெண்ணின் கட்சி தோல்வி