தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வளிப்பதே எங்களுக்கு முக்கியம்: அங்கஜன் இராமநாதன் (Video)
தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வளிக்க வேண்டும் என்ற அவசியத்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அறிந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (27.07.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
சர்வகட்சி மாநாடு ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி 13 ஆம் திருத்த சட்டத்தை கொண்டுவரும்போது அதை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை ஒரு தேர்தலை நடத்துவதில் தங்கியுள்ளது.
இலங்கை பொருளாதார ரீதியில் மிகப்பெரிய சரிவை அடைந்திருக்கிறது. அபிவிருத்தியை முன்வைத்து அதிகாரப்பகிர்வை செய்வதாயின் நாங்கள் முழுமையான சம்மதத்தை வழங்க தயாராக உள்ளோம். என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயங்கள் குறித்து முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகிறது பின்வரும் காணொளி,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
