கடிதம் மூலம் பந்துல குணவர்தனவிடம் கோரிக்கை முன்வைத்த அங்கஜன் இராமநாதன்
யாழ்ப்பாணம் - கொழும்புக்கிடையிலான அத்தியாவசிய உணவு, மருந்துபொருள் விநியோகத்துக்காக தற்போதைய நிலையில் மாற்று வழிகளை ஏற்பாடு செய்து தருமாறு யாழ் வணிகர் கழக பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கமைய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் அங்கஜன் இராமநாதன் கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அத்தியாவசிய தேவை
அமைச்சருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில், “யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் இதுவரைகாலமும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் அத்தியாவசிய உணவு பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக ஏராளமான லொறிகளை பயன்படுத்தினர்.
துரதிஷ்டவசமாக தற்போதைய பொருளாதார நெருக்கடியின் கீழ் எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதால் யாழ்.மாவட்ட வர்த்தகர்கள் லொறிகளை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
புகையிரத சேவை
தற்போதைய நெருக்கடி நிலையானது மேலும் மோசமடைந்து, அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்களுக்கு போக்குவரத்துக்காக சுமார் பத்து அல்லது பன்னிரெண்டு புகையிரத வண்டிகள் தேவைப்படுவதால் அதற்கான செலவை அவர்கள் செலுத்த தயாராக உள்ளனர்.
எனவே இப்பிரச்சினையின் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு, அத்தியாவசிய பொருட்களை புகையிரதம் மூலம் சலுகை விலையில் கொண்டு செல்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.






அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
