நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அங்கஜன்
நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதோடு நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் இன்றையதினம் (15.11.2024) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக அறிக்கையில் மேலும்,
நாம் பதவிகளில் இருக்கும்போது எம் மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் மக்களுடைய தேவைகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்தோம் என்ற மனத்திருப்தி முழுமையாக உள்ளது.
நம்பிக்கை
ஏனையவர்களைப் போன்று எதையும் செய்யாது காலத்தைக் கடத்திய அரசியல்வாதியாக நான் இருக்கவில்லை என்பது நிதர்சனமானது.

இந்த பொறுப்பை மக்கள் இப்போது புதிதாக கையளித்துள்ளவர்களும் இப்பணிகளை சிறப்பாக தொடர்வார்கள் என்ற நம்பிக்கையே மக்களிடத்தில் உள்ளது.
தோற்றாலும் விட்டுச்செல்வதுமில்லை
இத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், காலங்காலமாக பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் எனக்கில்லை என்பதோடு என்னால் எனது சொந்த விடயங்களை கவனிக்க கிடைத்த சந்தர்ப்பமாகவும் இதனை எடுத்துக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் மக்களுக்கு என்னால் ஆற்றக்கூடிய சேவைகளை அங்கஜன் இராமநாதன் என்ற தனிநபராக தொடர்ந்தும் மேற்கொள்வேன்.
தோல்விகளை சந்திக்காதவர்கள் ஒருபோதும் வெற்றியாளராவதில்லை. அதேநேரத்தில் தோற்றாலும் விட்டுச்செல்வதுமில்லை. - என்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri