யாழ். அரசாங்க அதிபருடன் ANFREL தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட சந்திப்பு
யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ANFREL (Asian Network Free Elections) தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பானது, இன்றைய தினம் (04.11.2024) யாழ்ப்பாண அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
முன்னாயத்த செயற்பாடுகள்
இச்சந்திப்பில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

மேலும், ANFREL தேர்தல் கண்காணிப்பு குழுவின் சர்வதேச கண்காணிப்பாளர் ஹெரி விபோவோ ரிக்சாக்சொனா (Mr.Hery Wibowo Trisaksono) மற்றும் எஸ். கலாராஜ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam