பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நியமனத்தில் பெரும் மோசடி! முக்கிய அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
2022 ஆம் ஆண்டு,184 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் அரசியல்வாதிகளின் கோரிக்கைக்கு அமைய நியமிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அப்போது பொலிஸ் மா அதிபராக இருந்த சீ.டி.விக்ரமரத்ன இந்த விடயம் தொடர்பில் அரசுக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, குறித்த நியமனங்களில் இரண்டு அதிகாரிகள் மாத்திரமே தனது பணிப்புரையின் கீழ் நியமிக்கப்பட்டனர் என்றும் குற்றம்சாட்டிருந்தார்.
கலந்துரையாடல்
பதுளையில் பொலிஸ் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சரும் நானும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சை பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நியமனம் அனைத்தும் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் மற்றும் அவரின் பணிப்புரைக்கமையவே நடைபெறுகிறது. அவ்வாறான ஒரு நிலையை நாம் உருவாக்கியுள்ளோம்.
பொலிஸ் மா அதிபர் அனுப்பும் கடிதத்தில் ஒரு கமா கூட மாற்றாமல் அதை பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதை தான் எனது வேலையாக செய்கிறேன்.
பொலிஸ் திணைக்களத்தில் நாம் மூக்கை நுழைப்பதால் அல்லது அழுத்தங்கள் பிரயோகிப்பதாலேயே வேலைகள் நடைப்பெறுவதில்லையென நினைத்தோம். இப்போது சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.பொலிஸார் சட்டத்திட்டங்களுக்குட்பட்டு வேலை செய்வார்கள் என நினைக்கிறோம் என கூறியுள்ளார்.



