கள்வர்களை துரிதமாக பிடிப்பதற்காக புதிய குற்றவியல் விசாரணைப் பிரிவு
விசாரணைகளை மிகக் குறுகிய காலத்தில் மேற்கொள்வதற்காக மத்திய குற்றவியல் விசாரணைப் பிரிவு CCIB பொலிஸ் திணைக்களத்தால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சிஐடிக்கு வரும் முறைப்பாடுகளை குறைக்கும் நிலைப்பாட்டில் நாம் இருக்கிறோம். இதுவரை 60,000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.இவற்றை விசாரணை செய்வது கடினமானதாகும்.
அதனால் பொலிஸ்மா அதிபரின் ஊடாக முறைப்பாடுகள் மத்திய குற்ற விசாரணைப் பிரிவு CCIB மாற்றப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மாகாண மட்டத்திலும் விசாரணைப் பணியகங்கள்
இலங்கையில் குற்றம் மற்றும் போதைப்பொருட்களைத் தடுக்கவும் பொது ஒழுக்கத்தை பராமரிக்கவும் மத்திய குற்றப் விசாரணைப் பணியகம், நாரஹேன்பிட்ட தொழிலாளர் கட்டடத்தின் ஏழாவது மாடியில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றம் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒரு திறமையான விசாரணை செயல்முறையை ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்க்கிறோம். விசாரணைகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
முறைப்பாடுகள் பெறப்படும்போது, விசாரணைகள் மிகக் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
மாகாண மட்டத்திலும் இந்த விசாரணைப் பணியகங்கள் நிறுவப்பட்டுள்ளன. மக்கள் குற்றங்கள் தொடர்பில் இந்து பணியகத்தில் முறைப்பாடுகளை செய்ய முடியும்.
முறைப்பாடுகளின் படி எந்த பகுதியிலும் விசாரணையை மேற்கொள்ளும் அதிகாரம் பணியகத்துக்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



