திருச்சி முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்கள்
திருச்சி(Tiruchi) முகாமில் தடுத்து வைக்கப்பட்ட கடற்றொழிலாளர்களை விடுதலை செய்தமைக்கு தமிழக அரசுக்கும் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் கடற்றொழில் அமைப்புக்களுக்கும், அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜோன் பொஸ்கோ நன்றி தெரிவித்துள்ளார்.
அனலைதீவில் இருந்து கடந்த 10/06/2023 அன்று கடல் சீற்றம் காரணமாக தமிழக கடற்றொழிலாளர்களால் காப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கையின் பின் திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் இருவரும் கடந்த 30ஆம் திகதி விடுவிக்கப்பட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
திருச்சி சிறப்பு முகாம்
அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம்(3) திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெர்னாண்டோ, நாகலிங்கம் விஐயகுமார் ஆகிய இருவருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களாவர்.
இவர்களை நீதிமன்ற தீர்ப்பின் படி படகுகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கிணங்க படகு மற்றும் வெளி இணைப்பு இயந்திரம் அடங்கலாக கடல் மார்க்கமாக விடுதலை செய்ய வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |