நாளை அல்லது நாளை மறுதினம் எதிர்பாராத அளவு ஒரு விலை அதிகரிப்பு ஏற்படும்! வெளியானது தகவல்
நாளை அல்லது நாளை மறுதினம் மின்சார கட்டணம் எதிர்பார்க்காத அளவு அதிகரிக்கக் கூடும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மின்கட்டணத்தை உயர்த்தும் யோசனையின் கீழ் இவ்வாறு மின்கட்டணம் அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதனை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாளை அல்லது நாளை மறுதினம் அளவில் மின்கட்டணம் அதிகரிக்கப்படும். 25 முதல் 50 சதவீதத்தினால் கட்டணம் அதிகரிக்கப்படுமா? என்பது குறித்து தெரியவில்லை.
கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய, மின்சார சபை முன்வைத்துள்ள யோசனைப்படி, முன்னர் காணப்பட்டதை விடவும் 500 சதவீதத்தால் அதிகரிக்கும்.
மின்சாரத்தை பயன்படுத்தாது எதிர்வரும் நாட்களில் மின்குழிழ் மற்றும் மின்விசிறி என்பவற்றை பார்த்து கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam
