திருமணம் செய்வதாக கூறி பண மோசடி! ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கண்டி மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு ஒன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழக்கு ஒத்திவைப்பு
பெண்ணொருவரை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து 10 இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2010ஆம் ஆண்டு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அந்த வழக்கிற்கு முன்னிலையாகாத காரணத்தினால் ரஞ்சனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |