கப்பல் உரிமையாளர்களாக மாறி நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகள்-வெளிநாடு வாழ் இலங்கையருக்கு பகிரங்க அழைப்பு
கப்பல்களுக்கு உரிமையாளர்களாக மாறி இலங்கையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யுமாறு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வெளிநாடுகளில் வாழும் செல்வந்த இலங்கையர்களுக்கு பகிரங்க அழைப்பை விடுத்துள்ளார்.
கப்பல் கூட்டுத்தாபனத்திடம் இரண்டு கப்பல்கள் மட்டுமே இருக்கின்றன

இது சிறந்த முதலீடு. இலங்கை கப்பல் கூட்டுத்தானத்திடம் இரண்டு கப்பல்கள் மாத்திரமே இருக்கின்றன. மேலும் கப்பல்களை கொள்வனவு செய்ய இலங்கையிடம் பணமில்லை.
இலங்கையில் பல்வேறு தொழில்களுக்கு உரிமையாளர்கள் இருக்கின்ற போதிலும் கப்பல் உரிமையாளர்கள் இல்லை. வெளிநாட்டு வங்கிகளில் பெருந்தொகை பணத்தை வைப்புச் செய்துள்ள இலங்கையர்களுக்கு இது சிறந்த சந்தர்ப்பம்.
இலங்கையில் நீர் வழி போக்குவரத்துக்கு மிகப் பெரிய வரவேற்புள்ளது

கப்பல் மாத்திரமல்ல ஏனைய நீர் வழி போக்குவரத்து சாதனங்களை கொள்வனவு செய்து, இலங்கையில் நீர் வழி போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியும்.இப்படியான நடவடிக்கைகளுக்கு நாட்டின் மிகப் பெரிய வரவேற்பு இருப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் நுற்றுக்கணக்கானோர்... கொடுஞ்செயலுக்கு திட்டமிட்ட இருவர்: விரிவான பின்னணி News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam