ஒன்லைன் வியாபார செயற்பாட்டில் ஈடுபட்டவர் உயிர் மாய்ப்பு
கைத்தொலைபேசி ஊடாக ஒன்லைன் வியாபார செயற்பாட்டில் ஈடுபட்டவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் சாய்ந்தமருது 11 உடையார் வீதியில் வசித்து வந்த முஹம்மட் நயீம் முஹம்மட் நப்லான் (வயது - 20) என்ற இளைஞனே விரக்தியடைந்த நிலையில் உயிரை மாய்த்துள்ளார்.
கைத்தொலைபேசி ஊடாக புதிய வகை வியாபாரம்
மரணமடைந்தவரின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சவளக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் மரணமடைந்த இளைஞன் சவளக்கடை பொலிஸ் பிரிவில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வருவதுடன் குறித்த ஆலையில் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை மாத்திரைகளை உட்கொண்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த மரணமடைந்த இளைஞனின் தந்தை தனது மகன் வெளிநாட்டில் தொழில் புரிவதற்காக முன்னாயத்தங்களை மேற்கொண்டதாகவும் அதற்காக அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக சேர்த்ததாகவும் இதன்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான கைத்தொலைபேசி ஊடாக புதிய வகை வியாபார உத்திகள் உருவாக்கப்பட்டு கொடுக்கல் வாங்கல் இளைஞர் முதல் பல்வேறு தரப்பினரை இலக்கு வைத்து செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |