யாழில் சந்தைக்கு சென்ற முதியவர் முச்சக்கர வண்டி மோதி உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பிய முதியவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி சிவன் பண்ணை வீதியூடாக, திருநெல்வேலி சந்தையில் மரக்கறி வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த முதியவர் எதிர் திசையில் வந்த முச்சக்கரவண்டி மோதி அவ்விடத்தில் மயக்கம் அடைந்துள்ளார்.
மரண விசாரணை
இதையடுத்து, முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் பின்னர் கடந்த மூன்றாம் திகதி வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், நேற்றையதினம்(17.08.2024) குறித்த முதியவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், அவரது சடலம் மீதாரம் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் தலையில் ஏற்பட்ட பலத்த அடியினாலே மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனை அறிக்கைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam