நுவரெலியாவில் பாழடைந்த நிலையில் மீட்கப்பட்ட அரச வாகனம்
நுவரெலியாவில் பாழடைந்த நிலையில் மறைத்து வைக்கப்பட்டிந்த முன்னால் போக்குவரத்து அமைச்சுக்கு சொந்தமான ஜீப் ரக வாகனம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனமானது, இன்று (14) மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலைய சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாகனத்தை நுவரெலியா - பதுளை பிரதான வீதியோரத்தில் அமைந்துள்ள நுவரெலியா வலயக்கல்வி அலுவலகத்துக்குச் சொந்தமான கட்டடத்திற்கு அருகில் மறைத்து விடப்பட்ட நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.
அமைச்சர் ஒருவர்
பல வருடங்களாக ஒரே இடத்தில் அந்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது முன்பக்க இலக்கத்தகடு இன்றியும் பின் பகுதியில் மாத்திரம் இலக்கத்தகடு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஜீப் ரக வாகனமும் மற்றுமொரு ஜீப் ரக வாகனமும் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் தனிப்பட்ட தொடர்பு அதிகாரியின் பாவனைக்காக அமைச்சரினால் வழங்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எனினும், இதனுடன் தொடர்புடைய மற்றொரு ஜீப் ரக வண்டியை கண்டுபிடிக்க பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நுவரெலியா பிரதேசத்தில் அரச வாகனங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போதே இந்த ஜீப் வண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam
