மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் இஸ்லாமிய மதகுரு ஒருவர் கைது
மட்டக்களப்பு - மாஞ்சோலை பிரதேசத்தில் இஸ்லாமிய மதகுரு ஒருவர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற போது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, அரலகங்வில விசேட அதிரடிப்படையினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
ஓட்டமாவடி, மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இஸ்லாமிய மதகுரு ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபரின் மோட்டார் சைக்கிளில் இருந்து இரண்டு T.56 துப்பாக்கிகள், அறுபது தோட்டாக்கள், இரண்டு மகசீன்கள் மற்றும் ஒரு பைனாகுலர் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மன்னம்பிட்டி விசேட அதிரடிப்படை முகாமிற்கு
கொண்டு சென்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இவரை கொழும்பிலுள்ள பயங்கரவாத
தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - பவன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
