ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lanka Government Of Sri Lanka
By Rukshy Jul 31, 2024 03:54 AM GMT
Report

அரசியலமைப்பில் உயர்நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையான இடைக்காலத்துக்கு பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு  இடமளிக்கப்பட்டிருந்தாலும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உயர்நீதிமன்றத்துக்கு எதிராகக் குழப்பம் விளைவிப்பதற்கு முற்படுவார்களேயானால் நாட்டுக்கு மிகமோசமான சேதம் ஏற்படும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன, தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றுவதற்கு இடைக்காலத்தடைவிதித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எவ்வித சட்டவலுவும் கிடையாது என்பதால் அதனை ஏற்கமுடியாது என குறிப்பிட்டார்.

தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த பெண் - யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கைது

தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த பெண் - யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கைது

அரசியலமைப்புப் பேரவை

மேலும், அரசியலமைப்புப் பேரவையின் அதிகாரத்தை நீதிமன்றத்தினால் சவாலுக்கு உட்படுத்தமுடியாது எனவும் தெரிவித்தார்.

warning-issued-the-asian-human-rights-commission

அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தான் போட்டியிடவிருப்பதால் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய பதில் பொலிஸ்மா அதிபரொருவரை நியமிப்பதிலிருந்து தான் விலகியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் அறிவித்தார்.

அதுமாத்திரமன்றி தேசபந்து தென்னக்கோன் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு முரணான கருத்துக்களையும் அவர் வெளியிட்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில் உயர்நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளும் வகையிலான இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் அரசியலமைப்புப் பேரவையின் தீர்மானங்களை உயர்நீதிமன்றத்தினால் சவாலுக்கு உட்படுத்தமுடியாது எனக் குறிப்பிட்டார்.

அவரது இந்தக் கருத்து சரியானதெனின், அரசியலமைப்பைவிட அரசியலமைப்புப்பேரவை மேலோங்கியிருப்பதாகவே கருதவேண்டியிருக்கும்.

பல்வேறு நெருக்கடிகள்

ஆனால் எந்தவொரு சட்டத்தினதும் அரசியலமைப்பு ஏற்புடைமை, அரசியலமைப்பின் பிரகாரம் இயங்கும் எந்தவொரு தரப்பினராலும் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அரசியலமைப்பு ஏற்புடைமை என்பன தொடர்பில் இறுதித்தீர்மானத்தை மேற்கொள்ளல் உயர்நீதிமன்றத்தின் கடமையாகும்.

warning-issued-the-asian-human-rights-commission

 இலங்கையின் அரசியலமைப்பானது அதிகாரப்பகிர்வுசார் கோட்பாடுகளை உறுதிப்படுத்தும் தொடர் பாரம்பரியத்தை அடிப்படையாகக்கொண்டிருக்கிறது. எனவே அரசியலமைப்பின் அனைத்து சரத்துக்களும் அதிகாரப்பகிர்வு, சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக அடிப்படைக்கோட்பாடுகள் ஆகியவற்றுக்கு உட்பட்ட விதத்திலேயே பொருள்கோடல் செய்யப்படவேண்டும்.

அதேபோன்று உயர்நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையான இடைக்காலத்துக்கு பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு அரசியலமைப்பில் இடமளிக்கப்பட்டிருப்பதுடன், பொலிஸ் சேவையில் ஈடுபடும் பெரும் எண்ணிக்கையானோரில் அதற்குப் பொருத்தமான ஒருவரைத் தெரிவு செய்ய முடியும். 

மாறாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உயர்நீதிமன்றத்துக்கு எதிராகக் குழப்பம் விளைவிப்பதற்கு முற்படுவார்களேயானால், ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நாட்டுக்கு மிகமோசமான சேதம் ஏற்படும்“ என்றும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. 

புதுக்குடியிருப்பில் வர்த்தகருக்கு கொலை அச்சுறுத்தல்

புதுக்குடியிருப்பில் வர்த்தகருக்கு கொலை அச்சுறுத்தல்

நாட்டில் மீண்டும் போராட்டம் வெடிக்க இடமளிக்கப்படாது! கமல் குணரட்ன

நாட்டில் மீண்டும் போராட்டம் வெடிக்க இடமளிக்கப்படாது! கமல் குணரட்ன

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US