சர்வதேச அளவில் அபார சாதனை படைத்த யாழ். இளைஞன்: சிறீதரன் எம்.பி வாழ்த்து
சர்வதேச மற்றும் தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டிகளில் அபார சாதனைகளை படைத்த யாழ். இளைஞனுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தென்மராட்சியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன், அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
புதிய சாதனை
அதேவேளை, அவர் பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசிய ரீதியிலான பளுதூக்கல் போட்டியில் கலந்து கொண்டு, மூன்று பிரிவுகளிலும் பங்கேற்று மூன்று தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில், 120 கிலோகிராமிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டு, squat பிரிவில் 330 கிலோகிராமையும் bench press பிரிவில் 175 கிலோகிராமையும், deadlift பிரிவில் 261 கிலோகிராமையும் தூக்கி வெற்றி பெற்றுள்ளதோடு, குறித்த போட்டியில் மொத்தமாக 766 கிலோகிராமை தூக்கி புதிய சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
