காலி வைத்தியசாலையில் இருந்து சிறைக் கைதி ஒருவர் தப்பியோட்டம்
காலி(Galle) - கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
வைத்தியசாலையில் இருந்து 32 வயதுடைய நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார் என காலி சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலை கைதி
இவர் காலி சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்தநிலையில், இவர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கழிவறைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளதுடன் கழிவறைக்குச் செல்வதற்காகக் கை விலங்குகளை அகற்றிய சிறைச்சாலை அதிகாரிகள், பாதுகாப்புக்காகக் கழிவறைக்கு முன்பாகக் காத்திருந்துள்ளனர்.

எனினும், சந்தேக நபர் வைத்தியசாலையின் கழிவறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam