கொக்குத்தொடுவாயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் வீதியில் நடந்து சென்றவரின் மீது பேருந்து மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளது. மிதிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றி சென்ற பேருந்து மூலமே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து சம்பவம்
இதன்போது படுகாயமடைந்தவர் கொக்குத்தொடுவாய் வடக்கினை சேர்ந்தவர் எனவும் 42 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (24) உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இவரது சடலம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பேருந்தின் சாரதி முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மின் வேலியில் சிக்கி வயோதிபர் மரணம்! |





ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam
