திருகோணமலையில் வீதியோரத்தில் சிசுவொன்று உயிருடன் மீட்பு (video)
திருகோணமலை - கன்னியா, சாரதாபுரம் வீதியில் உரப்பையில் போடப்பட்டிருந்த நிலையில் ஆண் சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனது பிள்ளைக்காக மருந்து எடுப்பதற்காக நேற்று (04.02.2023) கன்னியா சர்தாபுர வீதியினூடாக பயணித்துள்ளனர்.
இதன்போது உரப்பையில் வெள்ளைத் துணியினால் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்று இருப்பதை அவதானித்துள்ளனர்.

சிசு பற்றிய விபரங்கள்
இதனையடுத்து குறித்த குடும்பத்தினர் சிசு கிடந்த இடத்துக்கு அருகில் உள்ளவர்களை அழைத்து சிசுவை மீட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
பின்னர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த உப்புவெளி பொலிஸார் கைப்பற்றப்பட்ட சிசுவை திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் சிசு பற்றிய விபரங்கள்
தெரியவராத பட்சத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக உப்புவெளி பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam