போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது
ஹங்வெல்லையில் பாரியளவான போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி வந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹங்வெல்லை துன்னான பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையின் திடீர் சோதனை நடவடிக்கையின் போது குறித்த இராணுவ வீரர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட பொருட்கள்
விசேட அதிரடிப்படை தலைமையகத்துக்கு கிடைத்த தகவலின் போில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த முன்னாள் இராணுவ வீரர் செய்யப்பட்டதாக அதிரடிப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது அவரிடம் இருந்து 16 கிலோ கிராம் போதைப்பொருள் மூன்று கையடக்க தொலைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பாதுக்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
