பூண்டுலோயா கந்தசாமி தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு (Photos)
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை வலயத்திற்கு உட்பட்ட பூண்டுலோயா கந்தசாமி தமிழ் மகா வித்தியாலயத்தில் 1977ஆம் ஆண்டு முதல் 1987 வரை கல்விகற்றுத்தந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு 'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்ற தொனிபொருளில் வத்தளையில் இடம்பெற்றிருந்தது.
நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிப்பு
இந்த நிகழ்வு, பூண்டுலோயா கந்தசாமி தமிழ் மகா வித்தியாலயத்தின் 1987ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர மாணவர்கள் வட்டாரத்தில் இராஜமாணிக்கம் சத்தியமூர்த்தி தலைமையில் முப்பத்தாறு வருடங்களின் பின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் குறிப்பிட்ட காலப்பகுதியில் கல்விகற்றுத்தந்த அதிபர், ஆசிரியர்கள் என முப்பதிற்கும் அதிகமானோர் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி மற்றும் வெளிநாடுகளில் இருந்து பங்கேற்றிருந்தனர்.
நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு தொடர்ந்து மதிய உணவு வழங்கப்பட்டு ஆசிரியர்களின் உரையும் இடம்பெற்று நிகழ்வு நிறைவுக்கு வந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan