யுத்த காலங்களில் கடமையாற்றிய ஊடகவியலாளர்களுக்கு கௌரவிக்கும் நிகழ்வு
30 வருட யுத்த காலங்களில் இலங்கை நிர்வாக சேவையில் கடமையாற்றிய அதிகாரிகள் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்விற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் உள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு
இலங்கை நிர்வாக சேவையில் இருந்து அரசாங்க அதிபர்களாக கடமையாற்றி ஓய்வு பெற்ற ரூபாவதி கேதீஸ்வரன் தற்போது ஓய்வு பெற்று மீண்டும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக சேவையில் இணைந்துள்ளார். அவருக்கான பாராட்டு நிகழ்வுகளை நாம் ஏற்பாடு செய்துள்ளோம்.

அத்துடன், கடந்த 30 வருட யுத்த சூழ்நிலையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உயிரை துச்சமென மதித்து கடமையாற்றிய நிர்வாக சேவை அதிகாரிகள் அரசாங்க அதிபர்கள் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் உட்பட பலரும் கௌரவிக்கப்பட உள்ளனர்.
இந்த செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு வடக்கு - கிழக்கில் உள்ள வர்த்தக நிலையங்கள் உதவ முன்வர வேண்டும்.
முதன் முறையான கௌரவிப்பு
மேலும், கடந்த கால யுத்தத்தில் தமது உயிரை துச்சமாக மதித்து கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவை அரசாங்க அதிபர்கள் கௌரவிக்கப்படுவது இது முதல் தடவை என நினைக்கின்றேன்.

எதிர்காலத்தில் ஏனைய துறைகளை சார்ந்தவர்களும் எமது தொழிற்சங்கத்தினால் கௌரவிக்கப்பட இருக்கின்றனர்" என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா விரைவில் திருமணம்? சொத்து மதிப்பு குறித்து உலா வரும் தகவல்.. Cineulagam
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan