மலையக தியாகிகளை நினைவுகூரும் வகையில் அனுஷ்டிக்கப்பட்ட நிகழ்வு
மலையக மக்களுக்கான உரிமைப் போராட்டங்களில் உயிர் தியாகம் செய்த மலையக தியாகிகளை நினைவுகூரும், மலையக தியாகிகள் தினம் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு, இன்று(10.01.2025) கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், அரசியல் பிரமுகர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நினைவேந்தல் நிகழ்வு
மலையக தமிழ் மக்களுக்குரிய தொழில் சார் உரிமைகள், காணி உரிமை, மொழி உரிமை, அரசியல் உரிமை மற்றும் பொருளாதார உரிமை உள்ளிட்ட விடயங்களுக்கான போராட்டங்களின் போது உயிர் நீத்தவர்களே இன்று நினைவுகூரப்படுகின்றனர்.
நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை, டெவோன் தோட்டத்தில் உள்ள மலையக மக்களுக்கான காணி உரிமை போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த சிவனு லெட்சுமனனின் கல்லறையில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது.
இதன்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் போராட்டத்தில் உயிர்தியாகம் செய்து, மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த முல்லோயா கோவிந்தன் உயிர் துறந்த ஜனவரி 10ஆம் திகதியை, மலையக தியாகிகள் தினமாக அனுஷ்டிப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகம்
யாழ். பல்கலையில் மலையகத் தியாகிகள் மற்றும் 51ஆவது தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இன்று(10.01.2024) பல்கலைக்கழக பொதுத் தூபியில் மாணவர்களினால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செய்தி - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
