துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி யானை பலி
முல்லைத்தீவு மாவட்டம் - ஒலுமடு புலிமச்சிநாதகுளம் பகுதியில் வயல் வெளியில் இறந்த நிலையில் யானை ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
வயலினை பார்வையிட சென்றவர்களால் இன்று (10.06.2023) யானை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து கிராம சேவகர் ஊடாக ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு பிரதேசவாசிகள் தகவல் வழங்கியுள்ளனர்.
உடற்கூற்று பரிசோதனை
இதேவேளை இறந்த யானை பெண் யானை எனவும் அது 30 - 35 வயதினை கொண்டதெனவும் தெரியவந்துள்ளது.

குறித்த யானை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், இறந்த யானையின் உடற்கூற்று பரிசோதனைகள் இன்று (10.06.2023) மாலை வனஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்திய அதிகாரி முன்னிலையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan